நீட் தேர்வு எதிர்ப்பு கையெழுத்து அட்டைகள் எம்எல்ஏவிடம் ஒப்படைப்பு

Update: 2023-12-10 01:02 GMT

நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஆலத்துார் மேற்கு ஒன்றிய திமுக பொருப்பாளர் டாக்டர் வல்லவன், இளைஞரணிச் செயலாளர் - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஆணைக்கிணங்க, "நீட் விலக்கு நம் இலக்கு" நீட் தேர்வுக்கு எதிராக ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் நீட் தேர்வுக்கு எதிராக பொதுமக்களிடம் இருந்து கையெழுத்து பெறப்பட்ட அட்டைகளை, பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் இராஜேந்திரன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோரிடம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிபாஸ்கர் முன்னிலையில் வழங்கினார்.

Advertisement

இந்நிகழ்ச்சியின் போது ஆலத்தூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன், திருமால், மதியழகன், வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், சின்னசாமி, பெரம்பலூர் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் கருணாநிதி, இளைஞர் அணி துணை செயலாளர் துரைராஜ் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சுப்ரமணியன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவசங்கர் பாடலூர் அருண் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர் .

Tags:    

Similar News