சுசீந்திரம்: வெள்ளி அங்கியில் பக்தர்களுக்கு காட்சியளித்த ஆஞ்சநேயர்

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் விஸ்வரூப ஆஞ்சனேயர் வெள்ளி அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Update: 2024-06-23 08:17 GMT

 வெள்ளி அங்கியில் விஸ்வரூப ஆஞ்சனேயர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் பிரசித்தி பெற்ற 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை உள்ளது. பக்தர்கள் நினைத்த காரியத்தை நடத்தி கொடுக்கும் வல்லவராக திகழ்வதால்  பக்தர்கள் ஏராளம் பேர்  தரிசனம் செய்ய தினந்தோறும் வருகை தருகின்றனர்.     மேலும் ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஆண்டுதோறும்  மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் மாதம் தோறும் மூல நட்சத்திரத்தை அன்று ஆஞ்சநேயருக்கு வெள்ளியங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.       அதுபோல் நேற்றும் மூலம் நட்சத்திரத்தை ஒட்டி ஆஞ்சநேயருக்கு வெள்ளி அங்கி சார்த்தி  சிறப்பு வழிபாடு நடந்தது. இதில்  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயர் சாமிக்கு வெற்றிலை மாலை,துளசி மாலை, அரளி மாலை, வெண்ணை, வடை மாலை மற்றும் பக்தர்கள் தாங்கள் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் செய்திருந்தது.



Tags:    

Similar News