பிரிந்திருந்த மனைவியை சமரசம் பேச அழைத்து திடீர் தாக்குதல்

சேலத்தில் பிரிந்திருந்த மனைவியை சமரசம் பேச அழைத்து திடீர் தாக்குதலில் ஈடுபட்ட கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு.

Update: 2024-02-20 07:30 GMT
வழக்கு பதிவு
சேலம் இரும்பாலை பக்கமுள்ள சர்க்கார் கொல்லப்பட்டியை சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி மகாலட்சுமி. பெங்களூரைச்சேர்ந்தவர். இவர்களுக்கு 4 வயதில் மகன் இருக்கிறான். மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கோபி, தகராறில் ஈடுபட்டார். இதனால் அவரது பெற்றோர் வீட்டிற்கு மகாலட்சுமி சென்று விட்டார். பின்னர் சமரசம் பேசி இருவரையும் சேர்த்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இதற்காக பெங்களூரில் இருந்து சேலம் வருமாறு கணவர் அழைத்துள்ளார். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு மகாலட்சுமி, அவரது தம்பி . சரவணா (24), தாய் ரத்னா(43) ஆகியோர் சேலம் வந்தனர். அப்போது இருதரப்பினரும் சமரசம் செய்து கொண்டிருந்தபோது, திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த கோபி, அவரது தாய் கமலா, உறவினர்கள் ராமலிங்கம், ஜெயந்தி ஆகியோர் திடீரென சரவணா, ரத்னா ஆகியோரை தாக்கினர். இதில் காயம் அடைந்த இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் இரும்பாலை போலீசார், கணவர் கோபி, மாமியார் கமலா மற்றும் ராமலிங்கம், ஜெயந்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News