சங்கரன்கோவில் அருகே புது மாப்பிள்ளை திடீர் உயிரிழப்பு

சங்கரன்கோவில் அருகே புது மாப்பிள்ளை திடீர் உயிரிழப்பு. போலீசார் விசாரணை

Update: 2024-02-26 10:54 GMT
உயிரிழந்த மருதுபாண்டி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள அடைக்கலாபுரத்தைச் சேர்ந்தவர் காளிராஜ் மகன் மருதுபாண்டி (26). மருதுபாண்டிக்கும் அவரது உறவுக்கார பெண்ணிற்கும் இடையே கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. மருதுபாண்டி ராஜபாளையத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று மறு வீடு சென்று வீடு திரும்பிய மருதுபாண்டிக்கு இரவில் திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரது உறவினர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர்கள் ஏற்கனவே மருதுபாண்டி உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் கரிவலம் போலீசார் மருதுபாண்டியன் உடலை பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான மூன்று நாட்களில் புது மாப்பிள்ளை இறந்தது அடைக்கலாபுரம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News