மனநலம் பாதிக்கப்பட்டவர் திடீர் மரணம்
மானாமதுரை அருகே மனநலம் பாதிக்கப்பட்டவர் திடீர் மரணமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-03-04 09:55 GMT
மனநலம் பாதிக்கப்பட்டவர் மரணம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை யூனியனுக்குட்பட்ட சின்ன கண்ணனூர் அருகே உள்ள ஆணம்காத்தான் பகுதியைச் சேர்ந்த முத்துச்செல்வன் மகன் மகாலிங்கம் (80). இவர் கடந்த ஓராண்டாக மனநலம் சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில் சோமாத்துர் கண்மாய் பகுதியில் இறந்த நிலையில் கிடந்ததாக மகாலிங்கத்தின் மகன் முனியாண்டி மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அப்புகாரின் அடிப்படையில் மானாமதுரை காவல் நிலைய காவல் ஆய்வாளர் தெய்வீக பாண்டியன் இறந்த முதியவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.