பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஒயர் மேன் திடீர் சாவு
பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஒயர் மேன் திடீரென பலியாகினர்.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள முள்ளிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (42). இவர் பையர்நத்தம் மின்வாரிய அலுவலகத்தில் ஒயர் மேனாக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 5 மாதங்களாக கை கால்கள் திடீரென மறுத்து போனது.
இதற்காக இவர் அடிக்கடி மருத்துவமனை சென்று மருந்து சாப்பிட்டு வந்துள்ளார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் காலை தனது டூவீலரில் வேலைக்கு சென்றார்.
இரவு 8 மணி ஆகியும் அவர் வீட்டிற்கு வராததால் அவரது மனைவி ரேகா போன் செய்துள்ளார். ஆனால், அவரது செல்போன் சுவிட்ச் ஆப் என வந்தது. நேற்று காலை கோழி பண்ணை டேம் கால்வாயில் இவரது கணவர் விழுந்து கிடப்பதாக அவரது உறவினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து,பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.