கடையநல்லூரில் எலுமிச்சை விலை கிடுகிடு உயர்வு
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் கடையநல்லூரில் ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனையானது.;
Update: 2024-04-30 02:22 GMT
எலுமிச்சை
தென்காசி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா பகுதிகளில் எலுமிச்சை அதிகமாக சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால் எலுமிச்சை பழத்தை பொதுமக்கள் அதிகளவு வாங்குகின்றனர். மேலும் அண்டை மாநிலமான கேரளாவிற்கு எலுமிச்சை பழங்கள் ஏற்றுமதி செய்து வருவதால் இன்று முதல் ரக எலுமிச்சை பழம் முதல் ரகம் கிலோ ரூ.200க்கு விலை இரண்டாம் ராகம் கிலோ 150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் எலுமிச்சம் பழம் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .