இடி மின்னலுடன் திடீர் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி !
தூத்துக்குடியில் இடி மின்னலுடன் திடீர் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தூத்துக்குடி மாநகர பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கும் மேல் சென்றதால் பொதுமக்கள் மிகுந்து சிரமத்துக்குள்ளாயினர்.
இந்நிலையில், மேற்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படியே, இன்று மாலையில் மாநகர் முழுவதும் இடி மின்னல், பலத்த காற்றுடன் திடீரென பலத்த மழை பெய்ய தொடங்கியது.
மாநகரின் மட்டக்கடை, பொன்னகரம் இரண்டாம் கேட், 4ஆம் கேட், பிரையன்ட் நகர், மணி நகர், 3ஆவது மைல், கால்டுவெல் காலனி, கடற்கரை சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது.
இந்த மழை காரணமாக சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழை குளிர்ந்த காற்று வீசியதாம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாலையில் பள்ளிவிடும் நேரத்தில் மழை பெய்ததால் பெரும்பாலான மாணவ- மாணவிகள் மழையில் நனைந்தவாறு வீடுகளுக்கு திரும்பினர்.