புற்றுநோய்க்கட்டிகளை அகற்றி சுதா கேன்சர் சென்டர் சாதனை

வயிற்றில் பரவிய புற்றுநோய்க்கட்டிகளை அகற்றி சுதா கேன்சர் சென்டர் ஈரோடு மருத்துவக்குழுவினர் சாதனை படைத்துள்ளர்.;

Update: 2024-02-27 10:00 GMT

மருத்துவர்கள் சாதனை

ஈரோட்டை சேர்ந்த 52 வயதான விவசாயி ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது.

மீண்டும் திடீரென்று வயிற்றுவலி ஏற்பட்டதையடுத்து அவர் ஈரோட்டில் உள்ள சுதா கேன்சர் சென்டர் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது விவசாயிக்கு மீண்டும் புற்றுநோய் தொற்று ஏற்பட்டது தெரியவந்தது. ஆனால், சுதா கேன்சர் சென்டரில் இதற்கான நவீன சிகிச்சை அளிக்கும் தொழில் நுட்பங்கள் கொண்ட கருவி இருப்பதால்,

அதுபற்றி எடுத்துக்கூறி அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சைக்கு பின்னர் விவசாயி வயிற்றில் பரவிஇருந்த புற்றுநோய் கட்டிகள் முற்றிலும் அகற்றப்பட்டன.

Tags:    

Similar News