கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சாகுபடி செய்த கரும்பை பதிவு செய்ய வேண்டும்
கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சாகுபடி செய்த கரும்பை பதிவு செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு கலெக்டர் பழனி அறிவுறுத்தினார்.
விழுப்புரம் மாவட்டம், பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் எல்லைக் குட்பட்ட பதிவில்லா கரும்புகளை வருகிற 30- ந்தேதிக்குள் கரும்பு விவசாயிகள் பதிவு செய்து பயன்பெற வேண்டும். இந்த ஆலையானது 2023- 24-ம் ஆண்டு அரவைப் பருவத்தில் மொத்தம் 2,88,443 டன்கள் அரவை செய்து சர்க்கரை கட்டு மானம் 8.84 சதவீதம் அடைந்துள்ளது.
இதர கூட் டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு 54,500 டன்கள் கரும்பு பரிமாற்றமும் செய்துள்ளது. மேலும் வருகிற 2024-25-ம் ஆண்டு அரவைப் பருவத்திற்கு 9,130 ஏக்கர் மட்டுமே கரும்பு பதிவு செய்து இதன் மூலம் 2.50 லட்சம் டன் அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் செங் கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் எல்லைக்குட்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் சில விவசாயிகள் ஆலைக்கு இதுநாள் வரையிலும் பதிவு செய்யாமல் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர்.
இதனை வருகிற 30-ந்தேதிக்குள் ஆலைக்கு பதிவு செய்து ஆலை யின் அரவைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கரும்பு பற்றாக்குறை கரும்பு அறுவடையை எளிதாக்க 9 கரும்பு அறு வடை எந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளது. 2023- 24-ம் ஆண்டில் 21,337 டன் அறுவடை எந்திரம் மூலம் கரும்பு அறுவடை செய்யப்பட்டது. தற் போது சாறு உறிஞ்சும் பூச்சி மற்றும் இடைக்கணுப்புழுவின் தாக்குதல் பரவலாக காணப்படு கிறது.
இதனை கட்டுப்படுத்த கரும்பு நடவு, கட்டை விட்ட 5-வது, 7-வது மாதங்களில் தோகை உரிக்க வேண்டும். கரும்பில் "பொக்க போயிங்" எனும் பூஞ்சை நோயின் தாக்குதல் ஒரு சில இடங்களில் உள்ளது. இதனை ஆலை யின் கரும்பு அலுவலர்கள் அறிவுறுத்தும் கட்டுப் பாடு முறைகளை கடைபிடித்து கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
2024-25-ம் அரவைப்பருவத்திற்கு செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அரவைக்கு தேவையான கரும்பு பற்றாக்குறையாக உள்ள தால் ஆலையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்த கரும்பை முழுமை யாக கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு மட்டுமே அனுப்ப வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.