குமரியில் வெயில்: இளநீர் தர்பூசணி விற்பனை அமோகம்

குமரியில் வெயில் காரணமாக இளநீர் தர்பூசணி விற்பனை அமோக நடைபெற்றது.

Update: 2024-04-21 14:41 GMT

கோப்பு படம் 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகிறது. மேற்கு மாவட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சில இடங்களில் மழை பெய்தாலும் நாகர்கோவில், கன்னியாகுமரி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகின்றன.      

வெயிலின் தாக்கம் நாளுக்குள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். காலை 10 மணிக்கு பின்பு வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. சாலையில் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.      

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதற்கிடையில் மின்தடையின் காரணமாகவும் பொதுமக்கள் அவதிப்படும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.        வெப்பத்திலிருந்து  தங்களை பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் குளிர்பானங்கள், இளநீர், தார் பூசணி, நுங்கு போன்றவை வாங்குவதால் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலை ஓரங்களில் இளநீர் நுங்கு விற்பனை துவக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News