பெல் நிறுவனத்தில் சூப்பர்வைசர் மீது மின்சாரம் பாய்ந்து பலி

திருச்சியில் பணியின் போது மின்சாரம் தாக்கி சூப்பர்வைசர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2024-01-28 08:34 GMT

மின்சாரம் தாக்கி பலி

திருச்சி, திருவெறும்பூர் அருகே பெல் டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்தவர் வித்யாஷ் (40). இவரது கணவர் சிந்தனை செல்வன் (46). இவர் லட்சுமி எலெக்ட்ரோ கான்ட்ராக்ட் கம்பெனியின் மூலம் பெல் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். கடந்த 10ம் தேதி அன்று பெல் துணை நிலையம் தெற்கு கேட் அருகே வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. மின்சாரம் தாக்கியவரை உடனே மீட்டு பெல் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

Advertisement

அங்கு டாக்டர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர். தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி சிந்தனை செல்வன் உயிரிழந்தார். உயிரிழந்தவரின் உடல் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது குறித்து அவரது மனைவி பெல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பெல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News