இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கல்

இராசிபுரம் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு ரோட்டரி ராயல் கிளப் சார்பில் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

Update: 2024-03-21 04:23 GMT

உபகரணங்கள் வழங்கல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு ரோட்டரி ராயல் கிளப் சார்பில் நோயாளிகள் பயன்பெறும் வகையில் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நோயாளிகளுக்கு தேவையான பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் ராயல் கிளப் தலைவர் ரா .விஜய் தலைமையில் நடைபெற்றது . மாவட்ட உதவி ஆளுநர் அ.ராஜு அனைவரையும் வரவேற்று பேசினார்.

கிளப் செயலாளர் சக்திவேல், ராஜ்குமார், செயலர் தேர்வு ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆளுநர் ராகவன் மற்றும் ரோட்டரி முதல் பெண்மணி  ஜெயந்தி ராகவன் ஆகியோர் கலந்து கொண்டு உபகரணங்கள் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.மேலும் மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ் .சரவணன்  வாழ்த்துரை வழங்கினார் . சாசனத் தலைவர் அசோக்குமார், முன்னாள் தலைவர்கள் S. நந்தலால், ஆனந்தன், கார்த்திக், மற்றும் ரோட்டரி ராயல் உறுப்பினர்கள் பூபாலன், தலைவர்தேர்வு ரமேஷ், சபரி.ராஜேஷ்குமார், பாலாஜி, சிவா, மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் மருத்துவமனை செவிலியர். மருத்துவ பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் ஜெகதீஷ்வரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags:    

Similar News