திருப்பூரில் செவிலியர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்
திருப்பூர் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வருகிற செவிலியர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-21 09:06 GMT
மருத்துவ உபகரணங்கள் வழங்கல்
செவிலியர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் திருப்பூர், திருப்பூர் மாநகராட்சி ஆரம்ப சுகாதா நிலையத்தில் பணியாற்றி வருகிற செவிலியர்களுக்கு தனியார் அமைப்பு சார்பில் ரத்த அழுத்தம் பார்க்கும் கருவிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு எடை பார்க்கும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் முன்னிலை வகித்தார். தொடர்ந்து செவிலியர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநகர் நல அதிகாரி கௌரி சரவணன், டாக்டர் கலைச்செல்வன் மற்றும் வக்கீல் ஜெயசேகரன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பெரியார்காலனி மணி மற்றும் தனியார் அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். Sent from my iPhone