அரசு மருத்துவமனைக்கு மாத்திரைக் கவர்கள் வழங்கல்.....
கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு ஜீவ அனுக்கிரக பொதுநல அறக்கட்டளை சார்பில் மாத்திரை கவர் வழங்கும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை உள்ளது இங்கு கோவில்பட்டியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தது சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட வெளி நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் என வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மாத்திரை சீட்டுக்கு மாத்திரைகள் வாங்க வரும் நோயாளிகள் மாத்திரை சீட்டுக்கு மாத்திரைகள் வாங்கும் போது மருத்துவமனையில் இருந்து மாத்திரைகளை கவர் இல்லாமல் கையில் வழங்கி வருகின்றனர் ஆகவே கோவில்பட்டி ஜீவ அனுக்கிரக பொதுநல அறக்கட்டளை சார்பில் மாத்திரை சீட்டுகளுக்கு வழங்கும் மாத்திரைகளுக்கு கவர் வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நிறுவனர் ராஜேந்திரன் தலைமை வகித்தார் நகர் மன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான முத்துராஜன் கலந்து கொண்டு மாத்திரைக்கவர்கள் மற்றும் மருத்துவமனைக்கு தேவையான கருவிகளையும் அரசு மாவட்ட தலைமை மருத்துவர் பாலகிருஷ்ணனிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் ஜீவ அனுக்கிரக பொதுநல அறக்கட்டளை உறுப்பினர்கள் பாலசுப்ரமணியன் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.