திமுக கூட்டணிக்கு ஆதரவு-புரட்சிகர இளைஞர் முன்னணி

திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக புரட்சிகர இளைஞர் முன்னணி அறிவித்துள்ளது.;

Update: 2024-03-22 12:36 GMT

புரட்சி பாரதம் முன்னணியினர்

கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் புரட்சிகர இளைஞர் முன்னணியினர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.அப்போது வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவும் அதன் திரைமறைவு கூட்டாளிகளாக அதிமுகவை தோற்கடிக்க புரட்சிகர இளைஞர் முன்னணி பிரச்சாரம் மேற்கொள்ளும் என தெரிவித்தனர்.

கடந்த 10 ஆண்டு கால பாஜகவின் மக்கள் விரோத ஆட்சியால் மக்கள் வெறுப்பில் உள்ளதாகவும் மழை வெள்ளத்தால் தமிழகம் பாதிக்கபட்டபோது வராத பிரதமர் மோடி ஓட்டுக்காக ஓடோடி வருவதாக தெரிவித்தனர்.மேலும் சுயேட்சை அமைப்புகளான தேர்தல் ஆணையம்,சிபிஐ,அமலாக்கத்துறை போன்றவை பாஜகவின் கைக்கருவிகளாக மாற்றப்பட்டு விட்டதாகவும் மாநில அரசுகளின் அதிகாரங்களை பறித்து மத்திய அரசிடம் கையேந்தும் நிலையை உருவாக்கி உள்ளதாகவும் மதவாத பிற்போக்கு கட்சியாக பாஜக உள்ளதாக தெரிவித்தனர்.

Advertisement

ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு எதிரான மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அதிமுக தற்போது வாக்கு வங்கியை தக்க வைத்து கொள்ள தனித்து போட்டியிடுவதாகவும் பாஜகவுடம் கூட்டு இல்லை என நாடகமாடுகிறது என குற்றம் சாட்டினர்.பாஜகவை வீழ்த்த கூடிய அணியாக திமுக தலைமையிலான கூட்டணி உள்ளதாகவும் அவர்களுக்கு ஆதரவாக புரட்சிகர இளைஞர் முன்னணி பிரச்சாரம் மேற்கொள்ளும் என கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மலரவன் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவி,ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செயப்பிரகாசம்,கோவை புறநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News