சிதம்பரேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழா
Update: 2023-11-20 07:51 GMT
கந்த சஷ்டி விழா
கள்ளக்குறிச்சி சிவகாமி அம்மன் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் சூரசம்ஹார விழாவையொட்டி, காலை 6:00 மணிக்கு பஞ்ச மூர்த்தி சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர், மூலவர், உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் கந்தசஷ்டி கவசம், கந்தர் கலிவெண்பா, திருப்புகழ் பாடினர்.கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவில், முடியனுார் அபிதகுஜாம்பால் உடனுறை அருணாச்சலேஸ்வரர் கோவிலிலும் கந்த சஷ்டி விழா நடந்தது.