பெயின்டர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் சரண்

கருங்கல்லில் பெயின்டர் கொலை வழக்கில் போலீஸாரிடம் மேலும் ஒருவர் சரண் அடைந்தார்.;

Update: 2024-02-16 03:40 GMT
பைல் படம்

குமரி மாவட்டம் கருங்கல் அருகே பூவன் சந்தி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (44). பெயிண்டரான இவர் கடந்த ஜனவரி மாதம் 1ம் ஆம் தேதி கருங்கல் பஸ் நிலையம் அருகே உள்ள மதுக்கடைக்கு சென்ற போது அதே பகுதி ஆர் சி தெருவை சேர்ந்த சுபாஷ் என்ற ஜான் பால், ஜான் கபோர்டு ஜெனிபர், மகேஷ் மற்றொருவர் சேர்ந்து குடிக்க பணம் கேட்டு கடுமையாக தாக்கினர்.       இதில் உயிருக்கு போராடிய சுரேஷ்குமார் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி  ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி சுரேஷ்குமார் இறந்தார்.

Advertisement

இதையடுத்து கருங்கல் போலீசார் கொலை வழக்கமாக மாற்றி  தனிப்படை அமைத்து சம்மந்த பட்டவர்களை தேடிவந்தனர்.       இந்த வடக்கில் ஜான் கபோர்டு, சுரேஷ் ராஜன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய மகேஷ், சுபாஷ் என்ற ஜான் பால்  நீதிமன்றங்களில் சரணடைந்தனர். அனீஸ் என்பவர் கருங்கல் போலீசில் ஏற்கனவே சரண் அடைந்தார்.        இந்த வழக்கில் தொடர்ந்து தலைமறைவாகி இருந்த கருங்கல் போலீசார் தேடப்பட்டு வந்த ஆர் சி தெருவை சேர்ந்த காட்பெரின் (30) நேற்று கருங்கல் போலீசில் நிலையத்தில் சரண் அடைந்தார். இவருடன் இந்த வழக்கில் காட்பெரின் சகோதரர்கள் மூன்று பேர் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News