தேர்தல் செலவினங்கள் குறித்து ஆய்வு
கள்ளக்குறிச்சி இடைத்தேர்தலில் வேட்பாளர்களின் செலவினங்கள் குறித்து தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு மேற்கொண்டனர்.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி வேட்பாளர்கள் தாக்கல் செய்த இறுதிக் கட்ட தேர்தல் செலவினங்களை தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தங்களது 3வது மற்றும் இறுதியான தேர்தல் செலவினங்களை தாக்கல் செய்வதற்கான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, தேர்தல் செலவின பார்வையாளர் மனோஜ்குமார் தலைமை தாங்கினார். கலெக்டர் பிரசாந்த் முன்னிலை வகித்தார்.
லோக்சபா தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளர்களும் 95 லட்சம் ரூபாய் வரை தேர்தல் செலவினங்கள் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது. தேர்தலுக்கு முன் 2 முறையும், அதன்பின் 3வது முறை இறுதியான செலவின கணக்கு தாக்கல் செய்ய அறிவுறுத்தியது. அதன்படி நேற்று நடந்த இறுதிக் கட்ட தேர்தல் செலவின ஆய்வு கூட்டத்தில் அனைத்து வேட்பாளர்களும் தங்களது செலவினங்களை ஒப்படைத்தனர். அதில் தேர்தல் செலவின பார்வையாளர், வேட்பாளர்கள் தாக்கல் செய்த தேர்தல் செலவினங்களை ஆய்வு செய்தார்.