நாகர்கோவில் பதட்டமான வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம்,நாகர்கோவிலில் பதற்மான வாக்குசாவடிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட இளங்கடை, இடலாக்குடி, சரக்கல்விளை மற்றும் தெ.தி. இந்து கல்லூரி பகுதிகளில் உள்ள பதட்டமான வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., அவர்கள் இன்று (13.02.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்:- நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று பதட்டமான வாக்குசாவடிகள் என கண்டறியப்பட்ட நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட இளங்கடை அரசு தொடக்கப்பள்ளியில் வாக்குசாவடி எண் 239 மற்றும் 240 ஆகிய 2 வாக்குச்சாவடி மையங்களும், இடலாக்குடி, சதாவதானி செய்குதம்பி பாவலர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி எண் 234 முதல் 238 வரை உள்ள வாக்குச்சாவடி மையங்களும், சரக்கல்விளை அரசு தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி எண் 263 மற்றும் 264 ஆகிய 2 வாக்குச்சாவடி மையங்களும், தெ.தி. இந்து கல்லூரியில் வாக்குச்சாவடி எண் 212 முதல் 221 வரையிலான 10 வாக்குச்சாவடி மையங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களித்திட தேர்தல் அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
நடைபெற்ற ஆய்வில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அனில்குமார், தலைமையாசிரியர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.