செவலூரில் ஆட்சியர் ஆய்வு

செவலூரில் உள்ள கண்டநேரி கண்மாய் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய பாதிப்புகளை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-12-29 02:36 GMT
ஆட்சியர் ஆய்வு 
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செவலூர் கிராமத்தில் கண்டனேரி கண்மாய் அருகில் உள்ள விவசாய நிலங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்த பகுதியில் உள்ள விவசாயிகளிடம் அவர்கள் குறைகள் குறித்தும் பயிர் சேதம் குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) பேச்சியம்மாள், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நாச்சியார் அம்மாள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் விவசாயிகள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News