குற்றாலம் குற்றாலநாதா் கோயில் நிலங்கள் அளவிடும் பணி நடைபெற்றது
குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு எல்லைக்கற்கள் நடும் பணி நடைபெற்றது;
Update: 2023-12-30 11:22 GMT
கோவில் நிலங்களை அளவிடும் பணி
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு எல்லைக்கற்கள் நடும் பணி நடைபெற்றது. இக்கோயில் நிலங்கள் மேலகரம், கல்லூரணி, ஆண்டிப்பட்டி, பாட்டப்பத்து, கம்பநேரி புதுக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளன. அவற்றை அளவீடு செய்து எல்லைக்கற்கள் நடும் பணி , தூத்துக்குடி மண்டல இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அன்புமணி தலைமையில் நடைபெற்றது. இதில், தென்காசி தனி வட்டாட்சியா் (ஆலய நிலங்கள்) பத்மாசெல்வகுமாரி முன்னிலையில் நில அளவையா்கள் பால்ராஜ்,சுரேஷ், திருக்கோயில் பணியாளா்கள் குழுவாக இணைந்து எல்லைக்கற்களை நட்டனா்.