கணவரின் இறப்பில் சந்தேகம் - உடல் கூறு ஆய்வு செய்ய எஸ்.பி.யிடம் மனு

கணவரின் இறப்பில் சந்தேகமடைந்த மனைவி அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து, அவரது மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டறியும்படி காவல் நிலையத்தில் மனு.

Update: 2024-02-08 12:04 GMT

கணவரின் இறப்பில் சந்தேகம் - உடல் கூறு ஆய்வு செய்ய எஸ்.பி.யிடம் மனு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த மங்கைமடம் கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சம்மாள் என்கிற பாத்திமா நாச்சியார். இவர் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த அன்சாரி என்பவரை கடந்த 2009-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அன்சாரியின் முதல் மனைவி மற்றும் உறவினர்கள் இஸ்லாமிய மார்க்கப்படி இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர். அதன்பின்னர் அன்சாரி பாத்திமா நாச்சியாருடன் வசித்து வந்தார். அன்சாரி வெளிநாட்டில் வேலை பார்த்தபோது சீர்காழி தாலுகா பெருந்தோட்டம் மற்றும் மங்கைமடம் ஆகிய இடங்களில் சொத்துக்கள் வாங்கி வைத்துள்ளார். இந்நிலையில், சர்க்கரை நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருந்த அன்சாரிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று பின்னர் உடல் நலம் தேறினார். அவரை சென்னையைச் சேர்ந்த டிரைவர் கலைவாணன், அவரது நண்பர் செல்வகுமார், பெருந்தோட்டம் அஜிஸ், திருச்சம்பள்ளியை சேர்ந்த ஹக் ஆகியோர் கடந்த மாதம் 28-ஆம் தேதி காரில் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். வரும் வழியிலேயே அன்சாரி உயிரிழந்து விட்டதாக அவர்கள் கூறியதால் அன்சாரியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அன்சாரிக்கு சொந்தமான மங்கைமடம் திருநகரி கிராமத்தில் உள்ள மரவாடியை அன்சாரியின் உறவினரான சிராஜ்நிஷா, டிரைவர் கலைவாணன், அவரது நண்பர் செல்வகுமார், பெருந்தோட்டம் அஜிஸ், திருச்சம்பள்ளி ஹக் ஆகியோர் அபகரிக்கும் நோக்கத்தோடு பாத்திமா நாச்சியாரிடம் இடையூறு செய்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த பாத்திமா நாச்சியார் தனது கணவரை சொத்துக்காக மேற்படி நபர்கள் தான் காரில் வரும்போதே கொலை செய்திருக்க கூடும் என்றும் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து, அவரது மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டறியும்படி பாத்திமா நாச்சியார் மற்றும் அவரது உறவினர்கள் திருவெண்காடு காவல் நிலையம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
Tags:    

Similar News