புருசோத்தம பெருமாள் கோவிலில் சுவாமி திருவீதி உலா

குமாரபாளையம் அருகே புருசோத்தம பெருமாள் கோவிலில் சுவாமி திருவீதி உலா நடந்தது.

Update: 2024-01-16 11:10 GMT

குமாரபாளையம் அருகே புருசோத்தம பெருமாள் கோவிலில் சுவாமி திருவீதி உலா நடந்தது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை, புருஷோத்தம பெருமாள் கோவிலில்  வைகுண்ட ஏகாதசி உற்சவ விழாவில், மார்கழி மாதம் முழுதும் சிறப்பு பஜனை நிகழ்ச்சி,  துவாதசி விரத பூஜை, அனுமன் ஜெயந்தி விழா, கூடாரவல்லி சிறப்பு பூஜை, ராமானுஜர் சிறப்பு பூஜை,  உள்ளிட்ட வைபவங்கள் நடந்தது. இதன் ஒரு கட்டமாக பொங்கல் திருவிழாவையொட்டி பொங்கல் வைக்கப்பட்டு, சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன.

 கோவில் வளாகத்திலிருந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத புருஷோத்தம பெருமாள் திருவீதி வலம் நடந்தது. ஜெய்ஹிந்த் நகர், தட்டான்குட்டை, சத்யா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழியாக மேள தாளங்கள் முழங்க சிறப்பு திருவீதி உலா நடந்தது. பக்தர்கள் சுவாமி வரும் வழி நெடுக தண்ணீர் ஊற்றி பாதையை தூய்மை படுத்தியதுடன், பூஜைக்கு தேங்காய், வாழைப்பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் கொடுத்து கற்பூர தீபாராதனை காட்டப்பட்டு சுவாமிகளை  வழிபட்டனர்.

இந்த திருவீதி உலாவில் பஜனை குழுவினர் பங்கேற்று பெருமாள் புகழ் படும் பக்தி பாடல்கள் பாடியவாறு வந்தனர். திருவீதி உலா நிறைவு பெற்றதும், குழந்தைகள் பெருமாள், ராதா, கிருஷ்ணன் உள்ளிட்ட வேடங்களிட்டு நடன நிகழ்ச்சிகள் மூலம் பெருமாள் புகழை எடுத்துரைத்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News