நீச்சல் குளத்தில் நீச்சல் கற்பித்தல் பயிற்சி முகாம்

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் உள்ள நீச்சல் குளத்தில் கோடை காலத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தும் விதமாக நீச்சல் கற்பித்தல் பயிற்சி முகாம் 5 கட்டங்களாக நடைபெற உள்ளது.

Update: 2024-03-30 10:55 GMT

மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் உள்ள நீச்சல் குளத்தில் கோடை காலத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தும் விதமாக நீச்சல் கற்பித்தல் பயிற்சி முகாம் 5 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதல் கட்ட மாக 01.04.2024 முதல் 12.04.2024 வரையிலும், இரண்டாம் கட்ட மாக 14.04.2024 முதல் 25.04.2024 வரையிலும், மூன்றாம் கட்டமாக 27.04.2024 முதல் 08.05.2024 வரையிலும், நான்காம் கட்ட மாக 10.05.2024 முதல் 21.05.2024 வரையிலும், ஐந்தாம் கட்டமாக 23.05.2024 முதல் 03.06.2024 வரையிலும் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News