கட்சிகளிடமிருந்து கைநழுவிய சின்னங்கள் - கைப்பற்றிய சுயேச்சைகள்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினரிடம் இருந்து கைநழுவிய சின்னங்களை சுயேச்சை வேட்பாளர்கள் கைப்பற்றினர்.

Update: 2024-04-01 07:15 GMT

பைல் படம் 

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. தொடர்ந்து வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் அரசியல் கட்சியினரிடம் இருந்து கைநழுவி போன சின்னங்களை சுயேச்சை வேட்பாளர்கள் கைப்பற்றி உள்ளனர். கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டனர். தற்போது அந்த சின்னம் கர்நாடகாவில் செயல்பட்டு வரும் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனால் நாம் தமிழர் கட்சியினர் கோர்ட்டு வரை சென்றும், கரும்பு விவசாயி சின்னம் கைநழுவி போய்விட்டது.

தூத்துக்குடியில் அந்த சின்னம் சுயேச்சை சின்னமாக உள்ளது. இதனால் கரும்பு விவசாயி சின்னத்தை சுயேச்சை வேட்பாளர் அருணாதேவி பெற்று உள்ளார். இதேபோன்று கடந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட்டது. தற்போது அந்த சின்னத்தை நாம் இந்தியர் கட்சி என்.பி.ராஜா பெற்று இருக்கிறார். கடந்த தேர்தலில் அ.ம.மு.க.வினர் பிரஷர் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டனர். தற்போது அ.ம.மு.க.வினர் போட்டியிடும் தொகுதிகள் தவிர மற்ற தொகுதிகளில் பிரஷர் குக்கர் சுயேச்சை சின்னமாக ஒதுக்கப்பட்டு உள்ளது.தூத்துக்குடி தொகுதியில் பிரஷர் குக்கர் சின்னத்தை மக்கள் நல்வாழ்வு கட்சி கலீர் முருகப்பாவேந்தனுக்கு ஒதுக்கீடு செய்துள்ளனர்.

வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னம் 1. கனிமொழி (தி.மு.க.) உதயசூரியன் 2. சிவசாமி வேலுமணி (அ.தி.மு.க) இரட்டை இலை 3. மாணிக்கராஜ் (பகுஜன் சமாஜ் கட்சி) யானை 4. கலீர் முருகப் பாவேந்தன் (மக்கள் நல்வாழ்வு கட்சி) பிரஷர் குக்கர் 5. டாக்டர் காட்ப்ரே நோபல் (அனைத்து இந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம்) ஆட்டோ ரிக்க்ஷா 6. பெருமாள் குமார் (புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சி) காலணி 7. என்.பி.ராஜா (நாம் இந்தியர்) டார்ச் லைட் 8. ரொவினா ரூத் ஜேன் (நாம் தமிழர் கட்சி) ஒலிவாங்கி (மைக்) 9. எஸ்.டி.ஆர்.விஜயசீலன் (தமிழ் மாநில காங்கிரஸ்) மிதிவண்டி 10. அருணா தேவி (சுயேட்சை) கரும்பு விவசாயி 11. இசக்கிமுத்து (சுயேட்சை) பலாப்பழம் 12. கண்ணன்(சுயேட்சை) உழவுகருவி 13. கிருஷ்ணன் (சுயேட்சை) குளிர்சாதனப்பெட்டி 14. சாமுவேல் (சுயேட்சை) மோதிரம் 15. சித்திரை ஜெகன் (சுயேட்சை) தென்னந்தோப்பு 16. சிவனேஸ்வரன் (சுயேட்சை) பலூன் 17. சுடலைமுத்து (சுயேட்சை) வாயு சிலிண்டர் 18. செந்தில்குமார் (சுயேட்சை) கைப்பெட்டி 19. டேவிட் ஜெபசீலன் (சுயேட்சை) பென்டிரைவ் 20. பிரசன்னகுமார் (சுயேட்சை) ட்ரக் 21. பொன்குமரன் (சுயேட்சை) தொலைக்காட்சிப்பெட்டி 22. பொன்ராஜ் (சுயேட்சை) கேரம்பலகை 23. ராதாகிருஷ்ணன் (சுயேட்சை) தீப்பெட்டி 24. ஜெயக்குமார் (சுயேட்சை) பானை 25. ஜேம்ஸ் (சுயேட்சை) மடிக்கணினி 26. காந்திமள்ளர் (சுயேட்சை) மிக்ஸி 27. சண்முகசுந்தரம் (சுயேட்சை) வைரம் 28. செல்வகுமார் (சுயேட்சை) கணினி

Tags:    

Similar News