பழனியில் அண்ணாமலை படத்துடன் யாசகம் எடுத்து நேர்த்தி கடன்
பழனி திருஆவினன்குடி முருகன் கோவில் வாசலில் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டி, அண்ணாமலை படத்துடன் யாசகம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்திய பெண் நிர்வாகி.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-29 12:32 GMT
பக்தர் நேர்த்தி கடன்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலை அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி முருகன் கோவில் வாசலில் செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணி அளவில் சஷ்டி சேனா இந்து மக்கள் இயக்க நிறுவனர் சரஸ்வதி யாசகம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்க வேண்டும், நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை, ஜான் பாண்டியன் உள்ளிட்ட பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும் என வேண்டுதல் வைத்து முருகன் கோயில் வாசலில் யாசகம் பெற்று உண்டியலில் செலுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்.
அண்ணாமலை படத்துடன் கோயில் வாசலில் சரஸ்வதி அமர்ந்து யாசகம் கேட்டதை பக்தர்கள் பொதுமக்கள் பலரும் ஆச்சரியமாக பார்த்து சென்றனர்.