மண்டல கூட்டுறவு சங்க இணைப் பதிவாளராக பொறுப்பேற்பு
கள்ளக்குறிச்சி மண்டல கூட்டுறவு சங்க இணைப் பதிவாளராக முருகேசன் பொறுப்பேற்றார்.
Update: 2024-01-02 04:28 GMT
கள்ளக்குறிச்சி மண்டல கூட்டுறவு சங்க இணைப் பதிவாளராக முருகேசன் பொறுப்பேற்றார். கள்ளக்குறிச்சி மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளராக பணிபுரிந்த மீனாஅருள், வேலுார் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திருப்பத்துார் மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளராக பணிபுரிந்த முருகேசன் நியமிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி கூட்டுறவு சங்க இணைப் பதிவாளராக நேற்று பொறுப்பேற்று கொண்டார்.