வாணியம்பாடியில் தமிழர் பண்பாட்டு திருவிழா
வாணியம்பாடியில் வேர்கள் அமைப்பின் சார்பில் நடக்கும் தமிழர் பண்பாட்டு திருவிழா பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.
Update: 2024-01-07 03:30 GMT
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வாரச்சந்தை மைதானத்தில் வேர்கள் அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழர் பண்பாட்டுத்திருவிழாவை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.. 05,06,07 ஆகிய மூன்று தினங்களில் நடைப்பெறும் இந்த பண்பாட்டுத்திருவிழாவில், முதல் நாளான இன்று பரதநாட்டியம், பெரிய மேளம் மற்றும் பள்ளி மாணவர்களின் நாதஸ்வர நிகழ்ச்சி நடைப்பெற்றது, அதனை தொடர்ந்து பம்பை ஆட்டம், காவடியாட்டம், சிலம்பாட்டம், கருப்பசாமி ஆட்டம், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, கோலாட்டம், நாட்டுப்புறப்பாடல். போன்ற பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் இந்த தமிழர் பண்பாட்டுத்திருவிழாவில் நடைப்பெற உள்ளது, மேலும் இந்த பண்பாட்டுத்திருவிழாவில் மூலகை பொருட்கள், சிறுதானியங்கள், மற்றும் இயற்கை பொருட்கள் கண்காட்சிப்படுத்தப்பட்டது.மேலும் இந்த தமிழர் பண்பாட்டுத்திருவிழாவை காண வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.