மாயனூர் கதவணையில் ஆய்வு செய்த தமிழக கூடுதல் செயலாளர்

மாயனூர் கதவணையில் தமிழக கூடுதல் செயலாளர் சந்திப் சக்சேனா ஆய்வு செய்தார்.

Update: 2024-02-08 11:41 GMT

ஆய்வு செய்த கூடுதல் தலைமை செயலாளர் 

மாயனூர் கதவணையில் ஆய்வு செய்த தமிழக கூடுதல் செயலாளர் சந்திப் சக்சேனா. கரூர் மாவட்டம், மாயனூர் கதவணையில், 1.5 டிஎம்சி கொள்ளளவு திறன் கொண்ட அணையில், தற்போது சுமார் ஒரு டிஎம்சி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

கோடை காலம் துவங்கியுள்ளதால், தண்ணீரை பயன்படுத்த வேண்டியதின் அவசியம் அதிகம் ஏற்படும். அதே சமயம் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் தேவையான நீரை மாயனூர் கதவணையில் இருந்து விடுவிக்க வேண்டும். இதற்காக, இன்று தமிழக கூடுதல் செயலாளர் சந்திப் சக்சேனா மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில், மாயனூர் கதவணையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கதவணையை ஒட்டியுள்ள நீர் அளவீட்டுக் கிணறுக்கு சென்று நீரின் இருப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார். மேலும், அணையில் உள்ள நீர் இருப்பு, அணையில் இருந்து நீர் திறப்பு குறித்த ஆவணங்களை ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டம் முக்கொம்பில் உள்ள கதவணையை ஆய்வு செய்ய புறப்பட்டு சென்றார்.

இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்து கூடுதல் தமிழக செயலாளருக்கு தேவையான விபரங்களை அளித்தனர்.

Tags:    

Similar News