பெரியாம்பட்டியில் தமிழக முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

பெரியாம்பட்டியில் திமுக இளைஞரணி சார்பில் முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திமுக கட்சி கொடி ஏற்றி நல திட்டங்கள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.;

Update: 2024-03-04 01:55 GMT

தமிழக முதல்வர் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு காரிமங்கலம் ஒன்றியம், பெரியாம்பட்டி ஊராட்சியில் திமுக இளைஞரணி சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேஷ்குமார் தலைமை வகித்தார்.

மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் நல்லதம்பி, ஒன்றிய துணை செயலாளர் சித்ரா வடிவேல், ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயலட்சுமி சங்கர், சமத்துவபுரம் பூபதி, ஆறுமுகம், தங்கராஜ், இளைஞர் அணி துணை அமைப்பாளர் விஜய், கிருஷ்ணமூர்த்தி, சீனிவாசன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். பெரியாம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் திமுக கட்சியின் கட்சி கொடி ஏற்றப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

Advertisement

இனிப்புகள் மனநல காலை தொடர்ந்து காப்பகத்தில் உள்ளவர்களுக்கு உணவு மற்றும் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர் காளியப்பன், பாலசுப்பிரமணியன், சீனிவாசன், சுரேஷ், செல்லதுரை, பூபதி, அருண்குமார், குகன், புகழேந்தி, ஆட்டோ, ஹரி, ராஜ்குமார், தகவல்தொடர்பு அணி அறிவழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று மாட்லாம்பட்டி, திண்டல், காரிமங்கலம் ஆகிய பகுதிகளில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News