தமிழ்நாடு நாள் விழா : கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு
தமிழ்நாடு நாள் விழாவையொட்டி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடத்தப்படும் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ள பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தாய்த்தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூனை 18.07.1967 ஆம் நாளினைப் பெருமைப்படுத்தும் வகையில் அந்த நாள் தமிழ்நாடு நாளாகக்" கொண்டாடப்படும் மண்டிமிரு தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பெற்றது. இவ்வறிவிப்பிற்கிணங்க தமிழ்நாடு நாளையொட்டி மாவட்டத்திலுள்ள அணைத்துப் பள்ளிகளிலும் 6 முதல் 2ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும், டேசுப்போட்டிகள் 09.07.2024 ஆம் நாள் முற்பகலில் மதுரை தல்லாகுளம் செங்குந்தர் உறவின்முறை உயர்நிலைப்பள்ளியில் நடத்தப்பெறவுள்ளன.
அரசு/ தனியார் / அரசு உதவிபெறும் பள்ளிகளின் பாணர்கள் இப்பேச்சுப்போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டிகள் குறித்த விவரங்கள் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாகப் பள்ளிகளுக்கு அனுப்பப்படும். போட்டிக்கான தலைப்பு- குமரித் தந்தை மார்சல் நேசமணி,தென்னாட்டு பெர்னாட்ஷா பெரறிஞர் அண்ணா,முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி மாவட்ட அளவில் ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ 10000/- இரண்டாம்பரிசு ரூ.7000/- மூன்றாம் பரிசு ரூ.5000 என்ற வீதத்தில் வழங்கப்பட உள்ளன. மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல்பரிசு பெறும் மாணவர்கள் மட்டும் 12:07:2024 அன்று சென்னை மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிகளில் கலத்துகொள்ளப் பரிந்துரை செய்யபடுகிறார்கள்.