தமிழ்நாடு நாள்: திண்டுக்கல் மாவட்டத்தில் பேச்சுப்போட்டி

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு நாளை முன்னிட்டு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது.

Update: 2024-06-30 12:12 GMT

தமிழ்நாடு நாள்

திண்டுக்கல் மாவட்டத்தில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் 09.07.2024 அன்று காலை 9.30 மணி முதல் திண்டுக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளன.

கட்டுரைப் போட்டி “ஆட்சிமொழி தமிழ்” என்ற தலைப்பிலும், பேச்சுப் போட்டி ”1. குமரித் தந்தை மார்சல் நேசமணி, 2. தென்னாட்டுப் பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா, 3.முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி” ஆகிய தலைப்புகளில் மட்டுமே போட்டிகள் நடத்தப்படும். கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் பள்ளி மாணவ, மாணவிகள்,

அவர்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் உரிய படிவத்தில் பரிந்துரை பெற்று மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும். முதற்கட்டமாக கீழ்நிலையில் போட்டிகள் நடத்தப்பட்டு அதனடிப்படையில் பரிந்துரைக்கப்பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டியில் கலந்துகொள்ளலாம்.

கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டியில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளபில் முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7000, மூன்றாம் பரிசு ரூ.5000, என்ற வகையில் காசோலைப் பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News