தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருமருகலில ஹரியானா போலீஸ் துப்பாக்கி சூட்டில் உயிர் பலியான விவசாயி கரன்சிங் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம் திருமருகல் சந்தைப்பேட்டை கடை தெருவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாபுஜி தலைமை தாங்கினார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர்,விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன்,ஒன்றிய தலைவர் மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஹரியானா போலீஸ் துப்பாக்கி சூட்டில் உயிர் பலியான விவசாயி கரன்சிங் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், மிக்சாம் புயல் மற்றும் தீவிர மழை பாதிப்பு நிவாரண நிதியாக தமிழக அரசு கோரும் ரூ.37 ஆயிரம் கோடியை வழங்க வேண்டும்,மேகதாது அணை கட்டுமான வரைவு அறிக்கையை நிராகரிக்க வேண்டும்,நெல் குவிண்டால் 500,கரும்பு டன் 500 ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும்,சம்பா,குறுவை, தாளடி நெற்பயிர்கள் மழை பாதிப்பு நிவாரணமாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.37 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.
இதில் ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ்,ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் துரைசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.