பெட்ரோல், டீசலுக்கு தமிழக அரசு கூடுதல் வரி - ஓ.எஸ்.மணியன்

பெட்ரோல், டீசலுக்கு மத்திய அரசை விட தமிழக அரசு கூடுதல் வரி வசூலிக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.

Update: 2024-04-14 07:42 GMT

தேர்தல் பிரசாரம் 

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம்தெரிவித்தது: பெட்ரோல் விலை 2014 இல் ரூ. 66.37 ஆக இருந்த நிலையில் 2024 இல் ரூ. 100.75 என்றும், டீசல் விலை 2014 இல் ரூ. 53.38 ஆக இருந்த நிலையில் 2024 இல் 92.44 எனவும், இதற்கு காரணமானவர்களை வாக்குகளால் விரட்டி அடிப்போம் எனவும் திமுக விளம்பரம் செய்துள்ளது. ஆனால், குருட் ஆயிலின் அடிப்படை விலை ரூ. 57.30, மத்திய அரசு வரி ரூ. 19.90, ஸ்டாலின் அரசின் மாநில வரி ரூ. 21.56, டீலர்களின் கமிஷன் ரூ. 3.48 என நாகப்பட்டினத்தில் ரூ. 102.24க்கு விற்கப்படுகிறது.

இதேபோல, டீசலின் அடிப்படை விலை ரூ. 58.06, மத்திய அரசின் வரி ரூ. 15.80, தமிழ்நாடு மாநில ஸ்டாலின் அரசு வரி ரூ. 17.74, பெட்ரோல் பங்க் கமிஷன் ரூ. 2.24 என மொத்தம் லிட்டருக்கு ரூ. 93.84}க்கு நாகப்பட்டினத்தில் விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வுக்குக் காரணமானவர்களை வாக்குகளால் விரட்டி அடிப்போம் என ஸ்டாலின் கூறுகிறார். அதாவது, மத்திய அரசின் வரியை விட பெட்ரோலுக்கும், டீசலுக்கும் கூடுதல் வரியை வசூலிப்பது ஸ்டாலின் அரசு.

இப்படி இருக்கும்போது யாரை விரட்டியடிப்பது. திமுகவை, உதயசூரியனை, திமுக கூட்டணியைத்தான் விரட்டியடிக்க வேண்டும் என்பதை அவரே ஒப்புக் கொள்கிறார். எனவே, கூடுதல் வரி விதிக்கிற திமுக கூட்டணியை வாக்காளர்கள் வாக்குகளால் விரட்டியடிக்க வேண்டும். மத்திய அரசு மீது பழியைச் சுமத்தி, தான் நாட்டு மக்களுக்கு மிகவும் சலுகை செய்வதைப் போல ஸ்டாலின் விளம்பரம் செய்கிறார். இந்த எந்த அளவுக்கு மோசடியானது, மக்களை ஏமாற்றுகிற செயல் என்பதைப் பார்க்க வேண்டும் என்றார் மணியன்.

Tags:    

Similar News