உசிலம்பட்டி பள்ளியில் தமிழக அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டி வழஙகல்
ஆர்.சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டி வழஙகப்பட்டது.
Update: 2024-02-01 07:00 GMT
உசிலம்பட்டி பள்ளியில் தமிழக அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டி வழஙகப்பட்டது. தமிழக முழுவதும் மாணவ மாணவிகளின் நலன் கருதி பள்ளிக்கு ஏதுவாக சென்று வருவதற்கு தமிழக அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் பள்ளியான ஆர்.சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டியை திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித் பாண்டி மாணவியர்களுக்கு மிதிவண்டி வழங்கி தொடங்கி வைத்தார்.இதில் 300க்கும் மேற்ப்பட்ட மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. இதில் திமுக நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவிகள் பங்கேற்றனர்.