இந்தியாவிலேயே நல வாரியங்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு

தமிழக பட்ஜெட்டில் தொழிலாளர்கள் நலனுக்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்.குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-19 10:20 GMT

தமிழக பட்ஜெட்டில் தொழிலாளர்கள் நலனுக்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்.குமார் தெரிவித்துள்ளார்.


மயிலாடுதுறையில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்.குமார் தலைமையில், தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வாரியங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த பொன்.குமார், தொழிலாளர்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து எடுத்துறைத்து தொழிலாளர்கள் நல சங்க நிர்வாகிகளின் குறைகள் குறித்து கேட்டறிந்து, அவற்றுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

தொடர்ந்து தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பல்வேறு வகையான கோடிக்கணக்கான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 18 வாரியங்கள் செயல்படக்கூடிய ஒரே மாநிலம் தமிழகம் மட்டும்தான்.தொடர்ந்து இங்கு திராவிட மாடல் ஆட்சி நடப்பதால்தான், ஒவ்வோரு துறையிலும் இந்தியாவுக்கு முன் மாதிரியாக விளங்கக் கூடிய திட்டங்கள் உள்ளன. 3 ஆண்டு காலத்தில் எல்லா வாரியங்களிலும் சேர்த்து, தமிழகம் முழுவதிலும் சேர்த்து 23 லட்சம் தொழிலாளர்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் 72 ஆயிரத்து 390 பேர் உள்ளனர். 3 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் ரூ.1,555 கோடி ரூபாய் அளவுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.5 கோடி அளவுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றப் பின்னர் வீடு இல்லாத கட்டுமான தொழிலாளருக்கு வீடு கட்ட ரூ.4 லட்சம் உதவி, குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் உதவிதொகை உள்ளிட்ட, உயர் கல்வி பயிலும் தொழிலாளியின் பிள்ளைக்க்கு கல்வி கட்டணம் விடுதிக் கட்டணத்தை வாரியம் ஏற்றுக்கொள்வது மேலும் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் உதவி என பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வரும் தமிழக பட்ஜெட்டில், நாங்கள் வைத்துள்ள கோரிக்கைகளின் அடிப்படையில் தொழிலாளர்கள் நலனுக்கான புதிய திட்டங்களை முதல்வர் வெளியிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. சர்வர் பிரச்சினை காரணமாக கணினியில், தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களின் தரவுகள் இல்லாமல் போனது தொடர்பான பிரச்சினை 90சதவீதம் சரி செய்யப்பட்டுவிட்டது. ஒரு வாரத்துக்குள் முழுமையாக தொழில்நுட்ப பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டுவிடும்.

ஓர் அரசாங்கம், மக்களுக்கான திட்டங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்தினால், மக்கள் அந்த அரசை ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்கு சாட்சிதான், மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றதாகும். தமிழக அரசின் திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றபடுகின்றன. வாரியங்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன என்றார்.

Tags:    

Similar News