தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் போராட்டம்
Update: 2023-12-20 11:39 GMT
வேலூர் மாவட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு மருத்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் அகில இந்திய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் சத்யநாராயணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சுமார் 60 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உயிர் காக்கும் மருந்து குறைந்த விலையில் தரமாக கிடைத்திட மருந்து உபகரணங்கள் ஜிஎஸ்டி வரி முழுமையாக நீக்க கோரி ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும் என ஐந்து அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.