தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவில் அருகே அடித்து கொலை செய்யப்பட்ட டிரைவரின் குடும்பத்திற்கு நிவாரண தொகை வழங்கக்கோரி தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-03-13 05:32 GMT
 ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் வயது 37 வேன் டிரைவரான முருகன் கடந்த எட்டாம் தேதி காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்டதாக புகார் இருந்தது. இந்நிலையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வேன் டிரைவர் முருகன் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் இன்பராஜ் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட இணை மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணி செயலாளர் கனகராஜ் வரவேற்புரை ஆற்றினார். மாநில பொருளாளர் நெல்லையப்பன், மாநில துணைப் பொது செயலாளர்கள் சண்முக சுதாகர், மரிய சுந்தரம் யாதவ் உள்ளிட்ட ஏராளமான தமிழக மக்கள் முன்னேற்றக் கழக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News