தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற கூட்டம்

மல்லசமுத்திரத்தில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.

Update: 2024-05-03 06:25 GMT

மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்தில் நேற்று நடந்த ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணபதி வரவேற்புரையாற்றினார். மாநில பொருளாளர் முருகசெல்வராசன் பேருரையாற்றினார். இதில், மத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தமிழ்நாட்டின் இடைநிலை, தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். புதிய தன்பங்கேற்பு ஓய்வூதியதிட்டம் கைவிடப்பட்டு, பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்ந்திடல் வேண்டும். பெருந்தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட விடுப்பூதிய உரிமையை தொடர்ந்து வழங்கிடல் வேண்டும்.

அறிஞர் அண்ணா ஆட்சிகாலம் முதல் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுவரும் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகள் தொடர்ந்து வழங்கிட வேண்டும். ஊராட்சி ஒன்றியம் ஒருஅலகு என்பதை கைவிட்டு, மாநிலம் ஒருஅலகு எனும் மாநில பணிமூப்பு அரசாணை எண்;243ஐ முற்றிலுமாக விலக்கி கொள்ளுதல் வேண்டும். தொடக்க மற்றும் நடுநிலை ஆசிரியர்களுக்கு, ஒன்றிய மற்றும் நகராட்சி பணிமூப்பின்படி பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்படுதல் வேண்டும்.

மத்திய அரசின் பொதுப்பட்டியலில் இருந்து கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வருதல் வேண்டும். தனித்துவமான மாநில கல்விகொள்கை வகுக்கும் குழுவின் அறிக்கையை விரைந்து வெளியிடப்படுதல் வேண்டும். என்பன உள்ளிட்ட, 16தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட மதிப்புறுத்தலைவர் ஆசைத்தம்பி, மாநில சொத்து பாதுகாப்புகுழு உறுப்பினர் பழனிசாமி, மாவட்ட செயலாளர் சங்கர், ஒன்றிய செயலாளர் ரவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News