தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க வைர விழா

Update: 2023-12-16 06:08 GMT

வைர விழா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க வைர விழா முன்னிட்டு கீழ்பென்னாத்தூர் வட்டக்கிளை சார்பில் நடந்த மாநாட்டிற்கு வட்டக்கிளை தலைவர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். செயலாளர் கோவிந்தன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருவண்ணாமலை மாவட்ட தலைவர் ஸ்ரீதர் சங்க கல்வெட்டை திறந்து வைத்தும், மாவட்ட துணைத் தலைவர் பாஸ்கர் சங்க கொடியை ஏற்றி வைத்தும்,சங்க செயல்பாடு, பணிகளில் ஏற்பட்டு வரும் பணிச்சுமைகள் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விளக்கி பேசினர். அப்போது வருகிற 23ந்தேதி சென்னையில் நடக்கும் சங்கத்தின் வைர விழா முன்னிட்டு நடக்கும் மாநில மாநாட்டில் அனைத்து பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் அவசியம் பங்கேற்க வேண்டும் என்பது குறித்தும் பேசினர். மாநாட்டு நிதியாக ரூ23 ஆயிரத்தை வட்டக்கிளை சார்பாக சங்க தலைவர் சீத்தாராமன் மாவட்ட தலைவரிடம் வழங்கினார். இதில், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், தமிழ்நாடுசத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் அண்ணாதுரை, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்ட இணைச் செயலாளர்கள் வேணுகோபால், சிவக்குமரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் பரிதிமால் கலைஞன், துணைத் தலைவர் சீத்தாபதி,தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப்பு வட்ட துணை ஆய்வாளர் சாகுல்ஹமீது, கீழ்பென்னாத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் சான்பாஷா, மண்டல துணை தாசில்தார் மாலதி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க வட்ட தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட துணைத் தலைவர் பிரவீன்குமார், கண்ணாளன், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க வட்ட தலைவர் சுந்தரம்,முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் கங்காப வானி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க வட்ட தலைவர் ஏழுமலை மற்றும் வட்டக் கிளை நிர்வாகிகள் உள்பட பலரும் கலந்து கொணட்னர். மாநாட்டில் பினவரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு தினமும் வருகை தரும் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அலுவலகத்திற்கென நேராக நுழைவு வாயில் அமைத்து தர வேண்டும். தாலுகா அலுவலகத்திற்கு தாசில்தாருக்கென ஒரு முதுநிலை வருவாய் ஆய்வாளர் பணியிடம் மட்டும் அரசாணைப்படி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக 3முதுநிலைவருவாய் ஆய்வாளர்கள் பணியிடம் ஒதுக்கீடு பெற்று வழங்க வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், காலவரையின்றி முடக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்புவிப்பினை மீள வழங்க வேண்டும், வருவாய்த்துறை ஊழியர்களுக்கென மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். கிராம உதவியாளர்கள் பணிக் காலத்தில் இறந்தால் அவர்களது வாரிசுகளுக்கு இதுநாள் வரை வழங்கி வந்த கருணை அடிப்படையில் பணி நியமனத்தை தொடர்ந்து வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இது நாள் வரை வழங்கி வந்த போக்குவரத்து படியை தொடர்ந்து வழங்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் 2022-ம் ஆண்டிற்கான துணை வட்டாட்சியர் பட்டியலை வெளியிட வேண்டும், 2023- ம் ஆண்டிற்கான முதுநிலை வருவாய் ஆய்வாளர் பட்டியலையும் வெளியிட வேண்டும். கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் காலியாக உள்ள முதுநிலை வருவாய் ஆய்வாளர்,இளநிலை வருவாய் ஆய்வாளர் ஆகிய பணியிடங்களை நிரப்பப்பட வேண்டும்.என்பன உட்பட 12 தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டன. முடிவில் வட்டக் கிளை பொருளாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.
Tags:    

Similar News