திருச்சியில் தமிழ்நாடு மாநில அளவிலான யோகாசனம் போட்டி
செழியன்'ஸ் கலைக்கோவில் யோகாலயம் சார்பாக 14 வது தமிழ்நாடு மாநில அளவிலான யோகாசனம் போட்டி நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-05 05:31 GMT
யோகாசனம் போட்டி
யோகாசனம் போட்டி
யோகாசனத்தை பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் நோக்கில் திருச்சி சுப்பிரமணியம் புரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் செழியன்'ஸ் கலைக்கோவில் யோகாலயம் சார்பாக 14 வது தமிழ்நாடு மாநில அளவிலான யோகாசனம் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, மதுரை, திருச்சி, கன்னியாக்குமரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள், மற்றும் இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரும் கலந்துக்கொண்டுள்ளனர். இந்த போட்டியில் 4 வயது முதல் 70 வயது வரை உள்ள அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர். இதில் யோகா சனத்தில் உள்ள அனைத்து கலைகளையும் செய்து, பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் மாணவ,மாணவிகள் செய்து காட்டினர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும் கோப்பைகளும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. குறிப்பாக அனைத்து பிரிவுகளிலும் முதல் இடத்தை பிடித்தவர்களுக்கு தனியாக சிறப்பு போட்டிகள் வைக்கபட்டது. இதில் முதல் இடத்தை பிடித்தவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.