ஆத்தூர்: தமிழ்புலிகள் கட்சி சார்பில் மோடி உருவபொம்மை எரிப்பு போராட்டம்

ஆத்தூரில் தமிழ் புலிகள் கட்சியினர் பிரதமர் உருவபொம்மையை எரிப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-05-25 11:49 GMT
ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பூரி ஜெகர்நாத் கோயில் ரகசிய அறை சாவி குறித்து கூறிய கருத்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில் சேலம் மாவட்டம், ஆத்தூர் மணிக்கூண்டு பகுதியில் தமிழ் புலிகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடி தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து தமிழ்புலிகள் கட்சியினர் பிரதமர் மோடி உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News