தமிழச்சி தங்கபாண்டியன் வாக்கு சேகரிப்பு-உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்

மயிலாப்பூர்,சோழிங்கநல்லூர் - பள்ளிக்கரணை பகுதியில் வாக்கு சேகரித்த தமிழச்சி தங்கபாண்டியன்;

Update: 2024-03-27 12:15 GMT

வருகின்ற மக்களவை தேர்தலில், திமுக சார்பில் தென் சென்னை மக்களவை தொகுதி வேட்பாளராக தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார்.இதனையொட்டி முன்னதாக மயிலாப்பூர் மேற்கு பகுதியில், மாவட்டச் செயலாளர் மயிலை வேலு MLA அவர்கள் தலைமையில் வாக்கு சேகரித்தார் .மேலும் சென்னை பள்ளிக்கரணை உட்பட பல்வேறு இடங்களுக்குச் சென்று தேர்தல் பரப்புரையில் அவர் ஈடுபட்டார். அங்கு அவருக்கு ஆரத்தி எடுத்தும், ஆள் உயர மாலை அணிவித்தும், கிரேன் மூலம் ராட்சத மாலை அணிவித்தும் திமுக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

Advertisement

அதை தொடர்ந்து கணேசபுரம் , ரோட்டரி நகர் மற்றும் திரு வீதி அம்மன் தெருவில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். அனைத்து தோழமைக் கட்சிகளும் அத்தனை பேரும் நடந்தே வந்து பிரச்சாரம் செய்தனர். உங்களுடைய அருமையான ஒத்துழைப்புக்கும் வாக்கு சேகரிப்புக்கும் எனது அன்பான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறினார். அப்போது சிபிஎம் தோழர்கள், காங்கிரஸ் கட்சி தோழமைகள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் திமுக தொண்டர்கள்,நிர்வாகிகள், வட்ட செயலார்கள் மற்றும் உடன்பிறப்புகள் பொதுமக்கள் என அனைவரும் உடன் இருந்தனர்.குறிப்பாக பெண்களின் அபிரிதமான வரவேற்ப்பை எண்ணி தாம் மகிழ்ந்ததாக தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார் .

Tags:    

Similar News