தமிழகம் முழுவதும் +2 பொது தேர்வு இன்று முதல் தொடக்கம் !

தமிழகம் முழுவதும் +2 பொது தேர்வு இன்று முதல் தொடங்கிய நிலையில் கோட்டை அரசு மகளிர் பள்ளியில் கலெக்டர் ஆய்வு.;

Update: 2024-03-01 11:09 GMT

+2 பொது தேர்வு 

தமிழகம் முழுவதும் இன்று 12 ஆம் வகுப்பு தேர்வு தொடங்கியது. இன்று தொடங்கும் இந்த தேர்வு வருகின்ற 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 16304 மாணவர்கள், 19,135 மாணவிகள் என மொத்தம் 35,439 மாணவ மாணவிகள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக மாவட்டம் முழுவதும் 151 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் என 3000 மேற்பட்டவர்கள் தேர்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முறைகேடுகளை தடுக்கவும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் குடிநீர் வசதி, மின் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது தேர்வு மையத்தில் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு செல்போன் பயன்படுத்த அனுமதி கிடையாது எனவும் கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சொல்லுவதை எழுதுபவர்கள் உதவியுடன் 252 மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை எழுதுகின்றனர். இந்நிலையில் கோட்டை அரசு மகளிர் பள்ளியில் கலெக்டர் பிருந்தா தேவி மற்றும் கல்வி அதிகாரி கபீர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Tags:    

Similar News