தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்
திருவண்ணாமலையில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
Update: 2024-05-24 16:27 GMT
திருவண்ணாமலை திருக்கோவிலூர் ரோடு திருவள்ளுவர் சிலை அருகே தார் சாலை மிகவும் சேதமடைந்திருந்தது. சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் இன்று திருவள்ளுவர் சிலை முதல் வேட்டவலம் பைபாஸ் ரோடு வரை தார் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.