டாஸ்மாக் பார் சப்ளையருக்கு  கத்திக்குத்து

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் டாஸ்மாக் பார் சப்ளையரை கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.;

Update: 2024-05-10 12:30 GMT
கத்திக்குத்து 

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வாத்தியார் விளை பகுதியை சேர்ந்தவர்  மணிகண்டன் (42). இவர் பார்வதிபுரம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில்  சப்ளையராக வேலை பார்த்து வருகிறார்.        

நேற்று இரவு டாஸ்மாக் பாருக்கு வந்த வெட்டூர்ணிமடம் வாத்தியார் விளையை சேர்ந்த பகவதி (24), அபின் (21) இருவரும் சப்ளையர் மணிகண்டனிடம் தகராறு செய்துள்ளனர்.  அங்குள்ள பாட்டில் உள்ள ஸ்டிக்கரை எடுப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் மூன்று பேருக்கும்  வாய் தகராறு ஏற்பட்டது.

Advertisement

அப்போது ஆத்திரமடைந்த பகவதி அபின் இருவரும் மணிகண்டனை பைக் சாவியுடன் உள்ள சிறிய கத்தியால் குத்தி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.      அங்கு அவர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மணிகண்டன் வடசேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பகவதி அபின் இருவரையும் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News