குடிநீர் மோட்டார் கட்டிடத்தின் மீது டாடாசுமோ மோதி விபத்து
குடிநீர் மோட்டார் கட்டிடத்தின் மீது மோதி டாடாசுமோ கவிழ்ந்து விபத்து.;
Update: 2024-01-29 06:57 GMT
விபத்து
அரியலூர் மாவட்டம் விளாங்குடி கிராமம் வழியாக கங்கைகொண்ட சோழபுரம் கோவிலுக்கு செல்வதற்காக டாடா சுமோ ஒன்று சென்றுள்ளது. அப்போது எதிர்திசையில் வந்தவர்கள் சைகை செய்யாமல் திரும்பியபோது, அவர்கள் மீது மோதாமல் இருக்க, டாடா சுமோவை வாகனத்தை திருப்பியபோது கட்டுபாட்டை இழந்து அங்கிருந்த குடிநீர் மோட்டார் கட்டிடத்தின் மீது மோதி விபத்துள்ளகுள்ளானது. இதில் டாடா சுமோவில் பயணம் செய்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மோகன்ராஜ், வசந்தா, கண்ணன், சரோஜா உள்ளிட்டோர் காயமடைந்தனர். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கயர்லாபாத் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.