இடைக்கோடு அருகே சாலையில் திடீர் விரிசல் ஜல்லியுடன் கவிழ்ந்த  டாரஸ் லாரி

குமரி மாவட்டம் இடைக்கோடு அருகே சாலையில் திடீர் விரிசலால் ஜல்லியுடன் டாரஸ் லாரி கவிழ்ந்து விழுந்தது.

Update: 2024-02-16 10:06 GMT
இடைக் கோடு பகுதியில் சாலை விரிசலால் கவிழ்ந்த டாரஸ் லாரி

குமரி மாவட்டம் மேல்புறம் முதல் மேல்பாலை  செல்லும்  பிரதான சாலைக்கு இடைப்பட்ட இடைக்கோடு பகுதியில் பாலம் ஒன்று உள்ளது.  இன்று காலை 6 மணி அளவில் ஜல்லி ஏற்றிக் கொண்டு டாரஸ் லாரி ஒன்று அந்த சாலையில் சென்று கொண்டிருந்தது.  அப்போது லாரியை ஓட்டி வந்த டிரைவர் பாலத்தின் அருகே சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு டீக்கடையில் டீ குடிக்க சென்று விட்டார்.

அப்போது அந்த லாரி நின்ற பகுதியில் திடீரென சாலை  பிளவுபட ஆரம்பித்தது.    சிறிது நேரத்தில் சாலையில் விரிசல் அதிகமாகி, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி அருகில் உள்ள தோட்டத்திற்குள் குப்புற கவிழ்ந்தது. இதனால் இதனால் அந்த பகுதியில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது.       

 தகவல் கிடைத்ததும் பளுகல்  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். லாரியின் பாரம் தாங்காமல் சாலையில் விரிசல் ஏற்பட்டு, விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. லாரி டிரைவர் முதலில் ஜல்லியை  சாலை பணிக்காக கொண்டு செல்வதாக கூறினார்.        

சந்தேகம் அடைந்த போலீசார் தொடர்ந்து விசாரித்த போது சாலை பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்தனர். எனவே சட்டவிரோதமாக கனிம வளம் கடத்தப்பட்டதா?  என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News