டீக்கடை உரிமையாளருக்கு கத்திக்குத்து

பசுவந்தனையில், டீக்கடை உரிமையாளரை கத்தியால் தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்டவர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2024-06-28 16:56 GMT

கோப்பு படம்

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனையை சேர்ந்தவர் சங்கர பாண்டியன் (53). இவர் பசுவந்தனை போலீஸ் குடியிருப்பிற்கு எதிரே டீக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருபவர் ராஜா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுந்தரவடிவேல் என்பவருக்கும் குடும்ப தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று சுந்தரவடிவேல், சங்கரபாண்டியன் டீக்கடைக்கு வந்து, டீ மாஸ்டர் ராஜாவிடம் தகராறு செய்துள்ளார்.

இதில், கைகலப்பு ஏற்படவே சுந்தரவடிவேல் தான் வைத்திருந்த கத்தியாமல் ராஜாவை வெட்ட முயன்றுள்ளார். இதனை தடுக்கச் சென்ற கடை உரிமையாளர் சங்க ரபாண்டியனை, சுந்தரவடிவேல் தான் வைத்திருந்த கத்தியால் தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த சங்கரபாண்டியன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார். உடனே, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஒட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், சங்கரபாண்டியனை கத்தியால் சுந்தரவடிவேல் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்காமல், பசுவந்தனை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்டு கத்தியால் தாக்கப்பட்ட சங்கரபாண்டியன் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சங்கரபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சம்பவத்தன்று எனது கடையில் டீ மாஸ்டராக இருக்கும் ராஜாவிடம், சுந்தரவடிவேல் தகராறில் ஈடுபட்டார். நான் அவர்களை விலக்கிவிட முயன்றேன்.

அப்போது, சுந்தரவடிவேல் கத்தியால் தாக்கினார். இதில், எனது தலையில் வெட்டு விழுந்து நான் கீழே விழுந்துவிட்டேன். உடனடியாக போலீசார் அங்கு வந்ததால் சுந்தரவடிவேலை கைது செய்து அழைத்து சென்றனர். என்னை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், தற்போது, என்னை கத்தியால் தாக்கிய சுந்தரவடிவேல் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர் மூலமாக போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்து சுந்தரவடிவேலுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். எனவே, குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்டு ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வரும் பசுவந்தனை போலீஸ் இன்பெக்டர் முத்துமணி மீது மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News